Daily Horoscope

வோடஃபோனுனா ஓடிப்போய்டுவோமா? அசால்ட்டாய் டீல் செய்த வோடஃபோன்!

Written By Prasanth Karthick
Updated: வெள்ளி, 1 நவம்பர் 2019 (16:34 IST)
வோடஃபோன் சேவை இந்தியாவில் நிறுத்தப்போவதாக வெளியான செய்தியை அடுத்து விளக்கம் அளித்துள்ளது வோடஃபோன் நிறுவனம்.

இந்தியாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனம் வோடஃபோன். ஆரம்பத்தில் ஹட்ச் என்ற பெயரில் செயல்பட்டு வந்த டெலிகாம் சேவையை லண்டனை சேர்ந்த வோடஃபோன் நிறுவனம் வாங்கியது.

ஜியோவின் வருகைக்கு பிறகு முதன்மையான நிறுவனங்களான ஏர்செல், ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் பலத்த வீழ்ச்சியை சந்தித்துள்ளன. சமீபத்தில் தொடர் வீழ்ச்சியின் காரணமாக ஏர்செல் நிறுவனம் திவாலானது. அதைத் தொடர்ந்து இந்திய தொலைத்தொடர்பு கூட்டமைப்பில் உள்ள ஏர்டெல், ஐடியா, வோடஃபோன் மற்றும் பிற நிறுவனங்கள் தங்களை பலப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்தன.

ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு கூட்டமைப்பில் இல்லாததால் விதிமுறைகள் ஏதுமின்றி சலுகைகள் அளித்து வருகின்றனர். மேலும் தற்போது வோடஃபோன் அரசுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலை குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசுக்கு தொலைத்தொடர்பு கூட்டமைப்பு அளித்துள்ளது.

அந்த விளக்கத்தை அரசு ஏற்று தளர்வுகள் அளிக்கக்கூடாது என ஜியோவும் மல்லுக்கு நின்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் வோடஃபோன் நிறுவனம் விரைவில் இழுத்து மூடப்படலாம் என்று செய்திகள் வெளியானது.

இதற்கு பதில் அளித்துள்ள வோடஃபோன் நிறுவனம் ”இந்தியாவில் சேவையை நிறுத்துவது குறித்து நாங்கள் யோசிக்கவே இல்லை. அரசுக்கு அளிக்க வேண்டியை தொகையை அளித்துவிட்டு, எங்கள் சேவையை தொடர்வோம்” என்று கூறியுள்ளனர்.

எல்லாம் காட்டு

என்னோட பாடி லாங்வேஜ்ல உள்நோக்கம் இல்லை!.. தப்பா எடுத்துக்காதீங்க!.. விஜய் டிவிட்!...

பட்ஜெட் அனுமதி வாங்காமல் 2000 கோடி ஊழல்!.. ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!...

AI உதவியுடன் இளமையாக மாற உருவான மருந்து: சில வாரங்களில் வயதை குறைக்கலாமா?

இரண்டடுக்கு ரஷ்ய ரயிலின் வித்தியாசமான அனுபவம்: இந்திய பெண் பயணி பகிர்ந்த வீடியோ வைரல்

50 நாட்களில் 4 முறை இடமாற்றம்: மனவேதனையை வெளிப்படுத்திய பெண் ஐஏஎஸ் அதிகாரி

அடுத்த கட்டுரையில்
Show comments