1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 23 செப்டம்பர் 2020 (16:54 IST)

அடிபொலி பிரீபெயிட் ஆஃபர்களை வழங்கும் Vi !!

Vi நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது.
 
Vi நிறுவனம் புதிய சலுகைகளின் விலை ரூ. 355 முதல் துவங்குகிறது. மேலும் ரூ. 405, ரூ. 696, ரூ. 795 மற்றும் ரூ. 2595 போன்ற சலுகை வ்வழங்கப்படுகின்றன. Vi சலுகைகளில் ஜீ5 சந்தா, டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவையும் வழங்கப்படுகிறது.
 
இவற்றில் ரூ. 355 மற்றும் ரூ. 405 சலுகைகளில் முறையே 50 ஜிபி மற்றும் 90 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ. 595, ரூ. 795 மற்றும் ரூ. 2595 விலை சலுகைகளில் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் முறையே 56 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 365 நாட்கள் வழங்கப்படுகிறது.