கேட்ட கேட்ட பரவசம்... காலர்களை குஷிப்படுத்த Vi Callertunes ஆஃபர்!!

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (11:53 IST)
வோடபோன் ஐடியா பெயர் மாற்றத்திற்கு பிறகு Vi Callertunes என்ற காலர் டியூன் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம். 
 
இந்திய நெட்வொர்க் நிறுவனங்களில் முக்கியமான நிறுவனங்களாக இயங்கி வந்த வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒன்றாக இணைந்தன. அதன்பிறகு வோடபோன் ஐடியா லிமிட்டட் என்ற பெயரிலேயே இயங்கி வந்த நிலையில் தொழில் போட்டியின் காரணமாக பலத்த பின்னடைவை சந்தித்தன.  
 
இந்நிலையில் வோடபோன் ஐடியா என்ற பெயரை சுருக்கி Vi என்ற புதிய பெயருடன், புதிய லோகோவுடன் வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது Vi Callertunes என்ற காலர் டியூன்ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. 
 
புதிய Vi Callertunes திட்டங்கள் ரூ.49, ரூ.69, ரூ.99 மற்றும் ரூ.249 ஆகிய விலைகளில் கிடைக்கிரது. இந்த திட்டங்கள் குறித்த முழு விவரம் பின்வருமாறு... 
 
ரூ. 49 காலர் டியூன் திட்டமானது 50 காலர் ட்யூன்களை நான்கு வாரங்களுக்கும் (ப்ரீபெய்ட் பயனர்கள்) 30 நாட்களுக்கும் (போஸ்ட்பெய்ட் பயனர்கள்) இலவசமாக வழங்குகிறது. 
 
ரூ.69 காலர் டியூன் திட்டமானது பயனர்களை வரம்பற்ற கலர் ட்யூன்களை மாற்ற அனுமதிக்கிறது. இருப்பினும் இதுவும் ரூ.49-ஐ போலவே நான்கு வாரங்களுக்கும் (ப்ரீபெய்ட் பயனர்கள்) 30 நாட்களுக்கும் (போஸ்ட்பெய்ட் பயனர்கள்) மட்டுமே செல்லுபடியாகும்.
 
ரூ.99 காலர் டியூன் திட்டமானது 100 காலர் ட்யூன்களை மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்குகிறது. 
 
ரூ.249 காலர் டியூன் திட்டமானது 250 காலர் ட்யூன்களை ஒரு வருடத்திற்கும் மேலாக கூடுதல் செலவின்றி மாற்ற அனுமதிக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :