திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 6 செப்டம்பர் 2018 (14:41 IST)

பட்ஜெட் போன் டூ காஸ்ட்லி போன்: ரெட்மி விலை உயர்வு

இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களின் நீண்ட கால ஆதரவை பெற்ற சியோமி, சிறிய அளவிலான லாபத்துடன் பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. சமீபத்தில் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. 
 
இந்நிலையில் ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால் ஸ்மார்ட்போன் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது சியோமி நிறுவனம். அதாவது, ஸ்மார்ட்போனில் பெரும்பாலான பாகங்கள் அமெரிக்கா, ஜப்பான், தைவான் போன்ற நாடுகளில் இருந்து தயாரிக்கப்படுகிறதாம். 
 
அமெரிக்காவின் டாலர் வலுவாகி கொண்டே சென்றால் செலவும் அதிகரிக்கும் எனவே, ஸ்மார்ட்போன் விலையிலும் திருத்தம் கொண்டுவர உள்ளதாக தெரிவித்துள்ளது. 
 
சியோமி அண்மையில் வெளியிட்ட ரெட்மி 6, ரெட்மி 6 ஏ, மற்றும் ரெட்மி புரோ ஆகிய மூன்றும் ரூ.5,999 முதல் ரூ.12,999 வரை விற்பனை செய்யப்படுகிறது. 
 
இதற்கு பின்னர் வெளியிடப்படும் ஸ்மார்ட்போன்கள் விலை கூட்டப்பட்டாலும் அவை வாடிக்கையாளர்களுக்கு எந்த வித பெரிய மாற்றமும் இல்லாத வகையில் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.