1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 26 அக்டோபர் 2018 (18:51 IST)

ரூ.3,499 + ஜியோ ஆஃபர்: ஸ்மார்ட்போன் வாங்க ரெடியா?

இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை ஜியோ ஆஃபர்களுடன் இணைந்து வழங்கியுள்ளது. 
 
மைக்ரோமேக்ஸ் ஸ்பார்க் கோ என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் மற்றும் கோல்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் பிரத்யேக விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு 25 ஜிபி டேட்டா ரூ.198 அல்லது ரூ.299 ரீசார்ஜ் செய்யும் போது வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.3,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
மைக்ரோமேக்ஸ் ஸ்பார்க் கோ சிறப்பம்சங்கள்: 
# 5.0 இன்ச் 854x480 பிக்சல் FWVGA டிஸ்ப்ளே
# 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் SC9832E பராசஸர்
# 1 ஜிபி ராம், 8 ஜிபி மெமரி, டூயல் சிம் ஸ்லாட்
# ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ கோ எடிஷன்
# 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
# 2 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
# 2000 எம்ஏஹெச் பேட்டரி திறன்