374 கோடி ஜிபி டேட்டா: ஜியோவிற்கு ரூ.271 கோடி இழப்பு!!
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நெட்வொர்க் துவங்கப்பட்டு ஒரு ஆண்டு காலம் நிறைவடைந்த நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அறிக்கை விவரங்கள்:
# ஜியோ வாடிக்கையாளர்கள் 10 GB அளவிற்கு மாதம் தோறும் இன்டர்நெட்டை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
# கடந்த செப்டம்பர் 30 ஆம் வரை, அதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 136.8 மில்லியனை எட்டிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
# கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 14.3 மில்லியன் வாடிக்கையாளர்கள் புதிதாக ஜியோவில் இணைந்துள்ளனர்.
# ஜியோ சேவை தொடங்கிப்பட்டது முதல் 374 கோடி GB டேட்டாவை வாடிக்கையாளர்கள் காலி செய்துவிட்டார்கள்.
# ஜியோ வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் மாதம் தோறும் 9.62 GB டேட்டாவை பயன்படுத்துகிறார்கள்.
# ஜியோவால் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் ரூ.271 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.
# மேலும், சியோவின் செயல்பாட்டு வருவாய் ரூ.1,443 கோடியாகவும், மொத்த வருவாய் ரூ.6,147 கோடியாகவும் உள்ளது.