1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 26 ஏப்ரல் 2018 (11:57 IST)

IPL விளம்பர மோசடி: ஏர்டெல் மீது ஜியோ புகார்...

ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கல் பல விளம்பரங்கலையும் டேட்டா சலுகைகளையும், லைவ் டெலிகேஸ்ட் ஆகியவற்றை வழங்கி வருகிறது. 
 
ஏர்டெல் நிறுவனம், தனது விளம்பரத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது ஆப்பை தரவிரக்கம் செய்து, ஐபிஎல் போட்டிகளை நேரலையில் இலவசமாக பார்க்கலாம் என்று விளம்பரம் செய்து வருகிறது. 
 
இதற்கு ஜியோ, ஏர்டெல் விளம்பரங்கள் மோசடியானது, தவறான விளக்கத்தை கொண்டுள்ளது. இதனால், பார்வையாளர்கள் ஏமாற்றப்பட்டு வருகின்ரனர் என உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தது. 
இந்நிலையில், ஜியோ நிறுவனம் ஏர்டெல் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ள நிலையில், உயர் நீதிமன்றம் ஐபிஎல் போட்டி தொடர்பான விளம்பரங்களை ஏர்டெல் மாற்றி அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 
 
மேலும், முற்றிலும் இலவசமாக காணலாம் என்ற விளம்பரத்தை தெளிவாகவும், இணையத்திற்கு பணம் வசூலிக்கப்படும் என்பதை தெளிவாக குறிப்பிடுமாறும் உத்தரவிட்டுள்ளது. 
 
ஏர்டெல் இது குறித்து கூறியதாவது, இது ஒரு அற்பமான புகார், இருப்பினும் உச்ச நிதீமன்றத்தின் உத்தரவின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.