1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 2 மார்ச் 2018 (14:28 IST)

ஒரே கால்.. 10 ஜிபி இலவச டேட்டா: ஜியோ போடும் புதிய தூண்டில் எதற்கு?

ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு துறையில் களமிறங்கியது முதல் மற்ற நிறுவனங்கள் நொந்து நூலாக ஆட்டம் கண்டது மட்டுமின்றி ஒரு நிறுவனம் திவால் ஆகும் நிலைக்கு வந்துவிட்டது.
 
இருப்பினும், ஜியோ தனது வாடிக்கையாலர்களுக்கு குறை வைக்காமல் சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது 10ஜிபி இலவச டேட்டா டேவை ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்க்ள் 1299 என்ற டோல்பி-ப்ரீ எண்ணை அழைக்க வேண்டும். 
 
அதன் பின்னர் வாடிக்கையாளரின் கணக்கில் 10 ஜிபி டேட்டா வந்து சேரும். ஆனால், இது எல்லா வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், முதலில் டேட்டா கிடைக்காத சில ஜிஐயூ எண்ணை அழைத்த பின்னர் தங்கள் கணக்கில் 10 ஜிபி டேட்டா கிடைத்தாக சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. 
 
தற்போது, ஜியோ இந்த 19 ஜிபி இலவச டேட்டாவை வழங்குவதற்கான காரணம் என்னவென்பது ஆராய வேண்டிய விஷயமே... அப்படி பார்க்கைகளில் கடந்த இரு தினங்களாக ஜியோ கால் வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதை சரி செய்யும் நேரத்தில், இந்த குற்றசாட்டில் இருந்து வாடிக்கையாளர்களை திசை திருப்ப இந்த 10 ஜிபி வழங்கப்பட்டிருக்கலாம்.
 
இதோடு, ஜியோ டிவியின் அறிமுகத்தை ஊக்குவிக்கவும் இந்த இலவசம் வழங்கப்பட்டிருக்கலாம். எதுவாக இருந்தால் என்ன 10 ஜிபி இலவச டேட்டா, கிடைக்க காரணம் வேண்டுமா என்ன? 1299 என்ற எண்ணுக்கு கால் செய்தி 10 ஜிபி பெற்றவுடன், அதனை மார்ச் 27-க்குள் பயன்படுத்திவிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.