செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (20:53 IST)

ரூ.4,299-ல் ஃபாரின் டூர்: ஜெட் ஏர்வேஸ் அதிரடி ஆஃபர்!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளிநாட்டு பயணங்களுக்கான டிக்கெட் மீது குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயித்து அதிரடி ஆஃபர் வழங்கியுள்ளது. 
 
இந்த சலுகையை பெற ஆகஸ்ட் 21-ல் இருந்து ஆகஸ்ட் 25-க்குள் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். பயண காலம் செப்டம்பர் 16-க்கு பிறகு இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
# இந்தியாவில் இருந்து கொழும்பு, டாக்கா, காத்மாண்டு ஆகிய இடங்களுக்கு ஒருவழிப் பாதையாக செல்ல ரூ.4.299 கட்டணம் ஆகும். திரும்பி வர எகானமி கிளாஸில் முன்பதிவு செய்தால், அதற்கு ரூ.9,999 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
குறிப்பு: இந்தியாவில் இருந்து பிரீமியம் கிளாஸில் கொழும்பு, டாக்கா, காத்மாண்டு செல்ல வேண்டுமானால் சலுகையின் கீழ் ரூ.20,699 கட்டணமாகிறது. அதில் திரும்பி வர முன்பதிவு செய்தால், ரூ.33,399 கட்டணம் ஆகிறது.
 
# அபுதாபி, துபாய், ஷார்ஜா, பஹ்ரைன், தோஹா, தம்மம், ஜெட்டாஹ், ரியாத், குவைத், மஸ்கட் ஆகிய இடங்களுக்கு செல்ல ஒருவழிக் கட்டணமாக ரூ.5,499 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திரும்பி வர முன்பதிவு செய்தால் ரூ.12,199 செலவாகிறது. 
 
குறிப்பு: சலுகையின்றி பிரீமியம் கிளாஸில் ரூ.18,490, திரும்பி வர முன்பதிவு செய்தால் ரூ.37,999 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.