Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிழிந்த, அழுக்கான ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி?

Updated: செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (14:31 IST)
கிழிந்த மற்றும் அழுக்கான ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் சிலர் கஷ்டப்படுவர். இவ்வாறான ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்றலாம் என தெரிந்துக்கொள்ளுங்கள்...
 
எப்படி மாற்றுவது?
 
# அனைத்து வங்கிகளும், கிழிந்த, அழுக்கடைந்த மற்றும் பயன்படுத்த முடியாத ரூபாய் நோட்டுக்களை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாகப் புதிய நோட்டுக்களை வழங்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. 
 
# குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தியாவில் உள்ள எந்த வங்கியிலும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம்.
 
#  பயன்படுத்த முடியாத ரூபாய் வங்கியின் மூலமாக ஏதாவது கட்டணம் செலுத்த பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம். 
 
மாற்ற முடியாத ரூபாய் நோட்டுகள்: 
 
# மடிந்து நொறுங்கிப் போன ரூபாய் நோட்டுக்கள், எரிந்து சிதைந்து போன ரூபாய் நோட்டுக்கள் போன்றவற்றை வங்கிகள் ஏற்றுக் கொள்ளாது. 
 
# ஏதேனும் வாசகங்கள் எழுதப்பட்ட ரூபாய் நோட்டுக்கள், அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் அல்லது கொள்கைகள் எழுதப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றவோ, டெபாசிட் செய்யவோ முடியாது.
 
# ரூபாய் நோட்டுகள் வேண்டுமென்றே வெட்டப்பட்டதாகவோ அல்லது சிதைக்கப்பட்டதாகவோ கருதப்பட்டால் வங்கிகள் அதனை ஏற்க மறுக்கும். 

எல்லாம் காட்டு

ஆதித்யா பிர்லா ஹவுசிங் ஃபைனான்ஸ் - தஞ்சாவூரில் புதிய கிளை

பயணிகள் விமானத்தில் லண்டன் செல்லும் விஜய்!.. பாதுகாப்பு பணிகள் தீவிரம்!..

நெகிழ்வுடன் நினைத்து பார்க்கிறேன்!.. எல்லோருக்கும் நன்றி!.. விஜய் போட்ட டிவிட்!..

தலைவரை அழ வச்சிட்டீங்க!.. வரலாறு தெரிஞ்சிகிட்டு பேசுங்க!.. ஜூலி கண்ணீர்!...

இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவு யாருக்கு ? நயினார் நாகேந்திரன் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments