1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 5 ஜூன் 2018 (11:40 IST)

பட்ஜெட் விலையில் கூகுள் ஸ்மார்ட்போன்...

கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யகாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களை அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது. இதனிடையே அடுத்து கூகுள் பட்ஜெட் விலையில் பிக்சல் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்த தகவலை ரோலன்ட் குவான்ட் வெளியிட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மே 2019-ல் வெளியிடப்படும் என்றும் இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.
 
புதிய ஸ்மார்ட்போன் குறித்த மற்ற விவரங்கள் இதுவரை அறியப்படாத நிலையில், வரும் நாட்களில் மேலும் புதிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.