வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 27 ஏப்ரல் 2019 (13:48 IST)

டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஸ்மார்ட்போன்... அமேசான் அமேசிங் சம்மர் சேல்

அமேசான் ஆன்லைன் விற்பனைத்தளம் சம்மர் ஸ்பெட்ஷல் ஆஃபர் விற்பனையை துவங்கவுள்ளது. வரும் மே 4 முதல் 7 வரை நடைபெறும் இந்த விற்பனையில் வழங்கப்படும் உள்ள சலுகைகளின் விவரம் பின்வருமாறு.. 
 
இந்த சம்மர் சேலில், 10 கோடிக்கும் அதிகமான பொருட்களுக்கு ஆஃபர்கள் வழங்கப்படயுள்ளன. ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேட்ஜெட்டுகளுக்கு 40% வரை தள்ளுபடி. 
 
குறிப்பாக ஒன்பிளஸ் 6T, ரெட்மி ஒய்3, ரியல்மி யு1, சாம்சங் கேலக்ஸி எம்20 ஆகியவற்றுக்கு 40% வரையில் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், வட்டியில்லா இஎம்ஐ ஆகியவை வழங்கப்படும். 
டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கட்டில், சேஃபா, மெத்தை போன்ற பொருட்களுக்கு 60% ஆஃபர் வழங்கப்படயுள்ளன. புத்தகங்கள், எண்டர்டெய்ன்மென்ட், ஜிம் வொர்க் அவுட் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றுக்கு 70% தள்ளுபடி.
 
குறிப்பு: அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாள் முன்பாகவே, அதாவது மே 3 ஆம் தேதி மதியம் 12 மணிக்கே இந்த விற்பனை துவங்கும்.