செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 26 மார்ச் 2020 (12:57 IST)

ஊரடங்கால் ஊஊ... Mi 10 லாஞ்ச் ஒத்தி வைப்பு!!

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம் த்ள்ளி வைக்கப்பட்டுள்ளது. 
 
சியோமி நிறுவத்தின் Mi 10 ஸ்மார்ட்போன் கடந்த பிப்ரவரி மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மார்ச் 31 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருந்தது. 
 
ஆனால், தற்போது நாடு முழுவதும் கொரோனா அபாயத்தால் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் Mi 10 இந்திய அறிமுகம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Mi 10 ஸ்மார்ட்போனின்  சிறப்பம் மற்றும் விலை விவரம் பின்வருமாறு...  
 
சியோமி Mi 10 சிறப்பம்சங்கள்:
# 6.67 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ AMOLED 19.5:9 HDR10 + 90Hz டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், அட்ரினோ 650 GPU
# 8 ஜி.பி. LPPDDR5 ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. UFS 3.0 மெமரி
# டூயல் சிம், MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# 108 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm, f/1.69, OIS, 8P லென்ஸ் எல்.இ.டி. ஃபிளாஷ்
# 12 எம்.பி. 1/2.6-இன்ச் 2PD சென்சார், 1.4um 
#  8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், OIS
# 20 எம்.பி. 117° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 20 எம்.பி. செல்ஃபி கேமரா
# இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 4780 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் QC 4+ / PD3.0 வயர் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
# 10 வாட் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
1. 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 40,920
2. 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 43,990 
3. 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 48,080