வரலாற்றில் முதல்முறையாக திண்டாடும் கோககோலா
இந்திய மக்களின் விழிப்புணர்வால் கோககோலா நிறுவனம் முதல்முறையாக இந்தியாவில் சரிவை சந்துள்ளது.
இந்திய முன்னணி குளிர்பான நிறுவனங்களில் ஒன்றான கோககோலா மூத்த மற்றும் மத்திய தர அதிகாரிகள் சுமார் 250 பேரை பணியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது. பெருநிறுவன அலுவலங்களின் கிளைகளை குறைத்துக்கொண்டு விற்பனை மற்றும் சப்ளை சங்கிலியை பலப்படுத்த கோககோலா திட்டமிட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் கோககோலாவின் உற்பத்தி மையங்கள் கடந்த ஒரு வருடத்தில் அதிகளவில் மூடப்பட்டு வருவது. புதிய உற்பத்தி மையங்கள் அமைக்கும் இடங்களுக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கோககோலா பானங்களுக்கு எதிரா பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதை அடுத்து மக்கள் விழித்துக்கொண்டனர்.
இதனால் கோககோலா நிறுவனம் தனது விற்பனையில் சரிவை சந்தித்துள்ளது. தற்போது தமிழ்நாடு முழுவதும் கோககோலா நிறுவனத்திற்கு 21 ஆலைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.