அள்ளிக் கொடுப்பதில் அம்பானியை மிஞ்சிய பிஎஸ்என்எல்!!
அமர்நாத் யாத்திரை செல்வோருக்கு என சிம் கார்டு வழங்க முடிவெடுத்த பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அமர்நாத் யாத்திரை செல்வோருக்கு என பிரத்யேக சிம் கார்டு வழங்க பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியிருக்கிறது.
இந்த சிம் கார்டு கட்டணம் ரூ.230. மேலும் பயனர்களுக்கு 333 நிமிடங்களுக்கு இலவச டாக்டைம், 1.5 ஜிபி டேட்டா பத்து நாட்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அமர்நாத் யாத்திரை செல்வோருக்காக புதிய விலையில் ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்தது. ரூ.102 விலையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் 7 நாட்களுக்கு வழங்கப்பட்டது.
இதோடு ரூ.98-க்கு பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்கள் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
அடுத்து ரூ.142 விலையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 300 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.