செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 11 டிசம்பர் 2017 (18:40 IST)

எஸ்பிஐ வங்கி கிளைகளின் பெயர் மற்றும் IFSC கோர்ட் மாற்றம்!!

எஸ்பிஐயுடன் இந்தியாவுடன், அதன் துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் உள்ளிட்ட ஐந்து வங்கிகள் இணைக்கப்பட்டன.
 
இதனால் சென்னை, ஹைதரபாத், மும்பை உட்பட பல நகரங்களில் செயல்பட்டு வந்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் 1,300 கிளைகளின் பெயர்கள் மற்றும் IFSC கோர்ட் மாற்றப்பட்டுள்ளன.
 
இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது கிளையின் பெயரையும் மாற்றப்பட்ட IFSC கோர்ட்டையும் தெரிந்துக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், வாடிக்கையாளர்களின் குழப்பத்தை தவிர்க்க வங்கிக் கிளைகள் குறித்த தகவல்கள், IFSC கோர்ட் குறித்தும் வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. 
 
இதுதொடர்பான தகவல்கள் வங்கியின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக 23,000 வங்கி கிளைகளின் பெயர்கள் மற்றும் IFSC கோர்ட் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.