1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 30 ஏப்ரல் 2017 (21:38 IST)

தினகரனுக்கு மேலும் ஒரு சிக்கல்: 5 எஸ்பிஐ வங்கிக்கணக்கில் ஹவாலா தரகர்களுக்கு பணப்பரிமாற்றமா?

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக தினகரன் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் வெளியே வரமுடியாத அளவில் மேலும் பல குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதால் தினகரனுக்கு சிக்கல் மேல் சிக்கல் எழுந்துள்ளது.



 


ஏற்கனவே இந்த வழக்கின் புதிய திருப்பமாக ஹவாலா புரோக்கர் நரேஷ் கைது செய்யப்பட்டு அவரிடம் ரூ.50 லட்சம் கைப்பற்றப்பட்ட நிலையில் தற்போது தினகரனின் ஐந்து எஸ்பிஐ வங்கிக்கணக்குகளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

அதில் பெரும்பாலும் ஹவாலா தரகர்களுக்கு தான் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதால் இதற்கு என தனி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.