வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 6 ஜூலை 2017 (16:03 IST)

எஸ்பிஐ வங்கியின் மல்ட்டி கரன்சி கார்ட் பற்றி தெரியுமா??

எஸ்பிஐ வங்கி மல்ட்டி கரன்சி கார்டு சேவையினை அறிமுகப்படுத்த இருக்கின்றது. இதன் மூலமாக வெளிநாடு செல்லும் போது எளிமையாக பணத்தினைக் கையாள முடியும். 


 
 
மல்ட்டி கரன்சி கார்டு பிரீபெய்டு கார்டு போன்றது. இந்த கார்ட் மூலம் 4 விதமான கரன்சிகளை ஏடிஎம்-ல் பொருத்திப் பெறலாம்.
 
எஸ்பிஐ வங்கியின் இந்தக் கார்டு திட்டத்திற்காக மாஸ்டர் கார்டு ஏசிய/ பெசிபிக் உரிமத்தினைப் பெற்றுள்ளது. அமெரிக்க டாலர், பிரிட்டிஷ் பவுண்டுகள், யூரோ மற்றும் சிங்கப்பூர் டாலர் உள்ளிட்ட கரன்சிகள் பெறக்கூடிய சேவையினை இது அளிக்கின்றது. 
 
இந்த கார்டை ஏடிஎம்களில் மட்டுமின்றி கடைகள், உணவகங்கள் போன்று அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம்.
 
எஸ்பிஐ மல்ட்டி கரன்சி கார்டு வங்கி கணக்குடன் இணைந்து செயல்படாது. ஒவ்வொரு நாளும் கரன்சி மதிப்பினை அறிய முடியும். 
 
இந்தக் கார்டில் எத்தனை முறை வேண்டும் என்றாலும் (காலாவதி தேதி வரை) பணத்தினை ஏற்றி பரிமாற்றம் செய்யலாம். கார்டின் மூலம் 10,000 டாலர்கள் வரை பயன்படுத்தலாம்.
 
எஸ்பிஐ வங்கியை தவிர்த்து மற்ற வங்கிளும் இந்த சேவை வழங்குகின்றது.