Daily Horoscope
✕

ஆப்படித்த அலிபாபா; அமேசானுக்கு இதுதான் கதி...

Updated: திங்கள், 22 ஏப்ரல் 2019 (13:30 IST)
ஆப்பிள் நிறுவனத்தை அடுத்து உலகின் மிகப்பெரிய மதிப்பு கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் அமேசான் உள்ளது. அமேசானில் சுமார் 5 லட்ச ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமாக இது செயல்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் அமேசான் சீனாவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாம். ஆம், கடந்த 2004 ஆம் ஆண்டு சீனாவில் நுழைந்த அமேசானுக்கு, சீனாவை சேர்ந்த அலிபாபா நிறுவனம் கடும் போட்டியாக இருந்தது. 
 
உள்ளூர் பொருட்களை விலைக்கு வாங்கி ஆன்லைனில் விற்பனை செய்வதில் குறைந்த செலவில் அலிபாபா சாதித்த காட்டியது. ஆனால், அமேசான் இதில் கோட்டை விட்டது. இதோடு அந்நாட்டை சேர்ந்த ஜேடி.காம் போன்ற நிறுவனங்களும் அமேசானுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. 
 
எனவே, சீனாவிலிருந்து முற்றிலுமாக வெளியேற அமேசான் முடிவு செய்துள்ளது. அதோடு, சீன சந்தை கைகொடுக்காத சூழலில் இனிமேல் முழு கவனமும் இந்தியா மீதுதான் என அமேசான் கூறியுள்ளது.

எல்லாம் காட்டு

அமைச்சர், எம்.பி பதவிகள் ராஜினாமா!.. எல்.முருகன் அதிரடி முடிவு..

திடீரென உச்சத்திற்கு சென்றது பங்குச்சந்தை.. ஒரே நாளில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு..

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தமிழக முதல்வர் விஜய் சந்திப்பு.. முக்கிய பேச்சுவார்த்தை...

மத்திய அமைச்சர் எல் முருகன் ராஜினாமா? தமிழக அரசியலை கவனிக்க போவதாக அறிவிப்பு...!

அடுத்த 48 மணி நேரத்தில்!.. வடகிழக்கு பருவமழை அப்டேட் கொடுத்த வானிலை மையம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments