டார்கெட் டேட்டா யூசர்ஸ்: ஏர்டெல் புதிய யுக்தி!!

செவ்வாய், 19 டிசம்பர் 2017 (14:16 IST)
முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை வழங்கியுள்ளது. அதிலும் அதிக அளவில் டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்காக இந்த சலுகையை வழங்கியுள்ளது. 
 
ரூ.49 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஆனால், இதன் வேலிட்டி 24 மணி நேரம் மட்டுமே. 
 
இது மட்டுமின்றி ரூ.98 மற்றும் ரூ.146 விலையிலும் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த திட்டங்களில் 1 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ஆனால், கூடுதல் டேட்டா தேவைப்படும் பட்சத்தில் ரூ.98 செலுத்தி 2 ஜிபி டேட்டா பெறலாம். இதன் வேலிடிட்டி ஐந்து நாட்கள்.
 
புதிய சலுகைகளை ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஆன்லைன் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த சலுகை ஜியோவின் ரூ.52 திட்டத்திற்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஏர்டெல் டேட்டா அளவையும் உயர்த்தியுள்ளது என்ப்து குறிப்பிடத்தக்கது. 

எல்லாம் காட்டு

தமிழகத்தில் இன்று மழை கொட்டப்போகுது!. எந்தெந்த ஊரில் தெரியுமா?...

தென்னிந்தியாவின் மிகப்பெரிய கட்சி தவெக.. 2 கோடிக்கும் மேல் உறுப்பினர்கள்..

மேகதாது அணைக்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானம்: முதலமைச்சர் விஜய்க்கு விசிக முழு ஆதரவு

தமிழகத்தில் பி.எட் படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு என்றும் நன்றி மறவோம்: விசிக ஆதவ் அர்ஜுனா நெகிழ்ச்சி பேச்சு

அடுத்த கட்டுரையில்
Show comments