பீட்டா டெஸ்டிங்: இலவச டேட்டா வழங்கும் ஏர்டெல்!
ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களில் வோல்ட்இ பீட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் வோல்ட்இ தொழில்நுட்பத்தோடு, இலவச டேட்டாவும் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ வழங்கப்படும் டேட்டாவை மூன்று கட்டங்களாக பயன்படுத்தலாம். மொத்தம் 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இவை வோல்ட்இ ஸ்விட்ச் எனேபிள் செய்து டவுன்லோடு செய்ய 10 ஜிபி டேட்டா, 4வது வாரத்தில் பரிந்துரை வழங்க 10 ஜிபி டேட்டா மற்றும் 8வது வாரத்தில் இறுதி பரிந்துரைகளை வழங்க 10 ஜிபி டேட்டா என பயன்படுத்தலாம்.
சில சமயங்களில் சீரற்ற சின்கல், அடிக்கடி பரிந்துரை வழங்க வேண்டும் என ஏர்டெல் தெரிவித்திருக்கிறது. மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், கேரளா, பீகார், பஞ்சாப் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.
பீட்டா டெஸ்டிங் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் வோல்ட்இ வசதி கொண்ட ஸ்மார்ட்போன், ஏர்டெல் 4ஜி சிம், மேம்படுத்தப்பட்ட ஓஎஸ் மென்பொருள் மற்றும் வோல்ட்இ ஸ்விட்ச் எனேபிள் செய்திருக்க வேண்டுமாம்.