வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (13:13 IST)

சும்மாவே கிடைக்கும் 32 ஜிபி டேட்டா: ஏர்டெல் சூப்பர் ஆஃபர்!

ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு 32 ஜிபி போனஸ் டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. 
 
ஏர்டெல் தற்போது தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ரீசார்ஜ்களில் இலவச கூடுதல் டேட்டா வழங்கி வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களில் 32 ஜிபி வரை டேட்டாவை வழங்குகிறது.
 
ரூ.399, ரூ.448, ரூ.499, ரூ.509 மற்றும் ரூ.588 ஆகிய ப்ரீபெய்ட் திட்டங்களில் இலவச கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து திட்டங்களிலும் ஏர்டெல் 32 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 
ஆனால் ரூ.499 ரீசார்ஜில் மட்டும் 20 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது. அடிப்படையில், மேற்கூறிய திட்டத்தில் ரீசார்ஜ் செய்வதால் ஒரு நாளைக்கு 400MB டேட்டாவையும், ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 250MB டேட்டாவும் அளிக்கப்படும். 
 
இந்த சலுகையைப் பெற, வாடிக்கையாளர்கள் ஏர்டெல் தேங்ஸ் மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டும். ரீசார்ஜ் நன்மைகளின் விரிவான விவரம் பின்வருமாறு...  
ரூ.399 திட்டம் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவை 84 நாட்களுக்கு வழங்குகிறது. 
ரூ.448 மற்றும் ரூ 499 திட்டம் 82 நாட்கள் செல்லுபடியாகும் முறையே 1.5 ஜிபி மற்றும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 
ரூ.509 மற்றும் ரூ.558 திட்டம் ஒரு நாளைக்கு முறையே 1.4 ஜிபி மற்றும் 3 ஜிபி டேட்டாவை முறையே 90 நாட்கள் மற்றும் 82 நாட்களுக்கு வழங்குகிறது.