1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. பிஃபா 2018
Written By
Last Modified: சனி, 23 ஜூன் 2018 (11:45 IST)

ஃபிபா உலகக்கோப்பை: சுவிட்சர்லாந்து, நைஜீரியா அணிகள் வெற்றி

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மூன்று ஆட்டங்கள் நடைபெற்றது. ஒரு ஆட்டத்தில் பிரேசில் அணி வெற்றி பெற்றது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் மற்ற இரண்டு ஆட்டங்களில் சுவிட்சர்லாந்து மற்றும் நைஜீரியா அணிகள் வெற்றி பெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்து நேற்று செர்பியா அணியுடன் மோதியது. இந்த போட்டியின் முதல் பாதியில் செர்பியா அணியின் அலெக்சாண்டர் ஒரு கோல் அடித்து அனியை 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப்படுத்தினார். பின்னர் இரண்டாவது பாதியில் சுவிட்சர்லாந்து அணி 52-வது நிமிடம் மற்றும் 90-வது நிமிடத்தில் கோல் அடித்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதன்பின்னர் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் சுவிட்சர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் போட்டியை வென்றது.
 
அதேபோல் நைஜீரியா மற்றும் ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையிலான மற்றொரு போட்டியில் நைஜீரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வென்றது.