Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் வைக்க நல்ல நேரம் எது தெரியுமா...?

Written By Sasikala
Updated: திங்கள், 11 ஜனவரி 2021 (10:46 IST)

பொங்கள் திருநாள் அன்று காலம் முழுவதும் நமக்கு உணவும் திறனும் வழங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கலிட்டு வழிபடுவது நம்  மரபாகும். 
 
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் 14:1:2021 அன்று வியாழக்கிழமை வருகின்றது. பொங்கல் வைக்க உகந்த நேரம் எப்போது என்று தெரிந்துக்கொள்வோம்.
 
காப்பு கட்ட: மார்கழி 29 - 13:01:2021 புதன்கிழமை காலை 9:00 முதல் 10:30 வரை உகந்த நேரம் ஆகும்.
 
பொங்கல் வைக்க நல்ல நேரம்: பொங்கல் திருநாள் 14:1:2021 அன்று வியாழக்கிழமை காலை 7:30 - 9:00 மணி வரையிலும் மற்றும் 10:30 - 12:00 மணி வரையிலும்  பொங்கல் வைக்க உகந்த நேரமாகும்.
 
மாட்டுப் பொங்கல் அன்று பூஜை செய்ய நல்ல நேரம்: தை 02 - 15:01:2021 வெள்ளிக்கிழமை காலை 9:00 - 10:30 மணி வரையிலான நேரம் பொங்கல் வைக்க உகந்த  நேரமாகும்.
 
கனுப் பொங்கல் வைக்க நல்ல நேரம்: தை 03 - 16:01:2021 சனிக்கிழமை 7:30 - 9:00 வரையிலும் மற்றும் 10:30 - 12:00 மணி வரையிலான நேரம் பொங்கல் வைக்க உகந்த நேரமாகும். 

அடுத்த கட்டுரையில்
Show comments