1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

சிம்புதேவன் இயக்கத்தில் கஞ்சா கருப்பு!

சிம்புதேவன்
வடிவேலை வைத்து இம்சை அரசன் 23ம் புலிக்கேசி படத்தை இயக்கிய சிம்புதேவன், அடுத்து இயக்கப்போகிற படம் அறை எண் 305ல் கடவுள்.

இதில் கஞ்சா கருப்பு பிரதான கேரக்டரில் நடிக்கப் போகிறார். முதல் படம் போலவே இதுவும் காமெடிப் படம்தானாம். உங்களுக்கு காமெடி பிரமாதமாக வருகிறது. அதிலேயே முயற்சி பண்ணுங்க என்று இயக்குனர் ஷங்கர் சொன்னாராம்.

அதேபோல் ஒரு காமடி கதையை ரெடி பண்ணி சொல்லியிருக்கிறார். பிடித்துப் போகவே படப்பிடிப்புக்கான வேலையில் இறங்கி விட்டார். முழுக்க முழுக்க சென்னையிலும், சென்னையைச் சுற்றியுள்ள இடங்களிலும் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

இம்சையைவிட ஒருபடி மேலே போய் திரைக்கதை பண்ணியிருக்கிறாராம் சிம்பு என படப்பிடிப்பினர் வட்டாரத்தில் சொல்கிறார்கள். கருப்பு தவிர சந்தானமும் நடிக்கிறார். கடவுளாக மம்மூட்டி, பிரகாஷ் ராஜ் என்று நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
About Writer
Webdunia