திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. தீபாவளி மலர்
Written By ஏ.சினோஜ்கியான்
Last Updated : வியாழன், 12 நவம்பர் 2020 (23:34 IST)

தீபாவளி பண்டிகையின் முக்கிய விஷயங்கள்…

தீபாவளிப் பண்டிகை ஐப்பசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தசியில் அமைவது நரகசதுர்த்திப் பண்டிகை. இதுவே தீபாவளிப் பண்டிகை என அழைக்கபடுகிறது.

இந்த உலகில் தீமையை நீக்கி ஒளி கொடுப்பதால் தீபாவளிப் பண்டிகை ஆகும்.

வடநாட்டில் 3 நாட்கள் வரை இப்பண்டிகை கொண்டாடுவர். முதல் நாளை சோட்ட தீபாவளி( சிறு தீபாவளி), இரண்டாம் நாள் படா தீபாவளி( பெரிய தீபாவளி),மூன்றாவது நாளன்று கோவர்த்தன பூஜை( கண்ணப்பிரானையும் பூசிப்பார்கள். இந்த நாளில்தான் நரகாசுரனை கண்ணன் வதம் செய்ததாகக் கூறப்படுகிறது.


தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தால் நம்மைப் பீடித்த பீடைகள் விலகி நன்மை உண்டாகும் என்றும்,  எண்ணெய்யில் திருமகளும் வெந்நீரில் கங்கையும் ஒன்று சேர்வதால் எண்ணெய்க் குளியல் செய்வோருக்கு கங்கையில் குளித்த புண்ணியம் உண்டாகும் என்றும் கூறப்படுகிறது.

தீபாவளி  நாளன்று செல்வம் விருத்தியாக லட்சுமியை வணங்கிப் புதுக்கணக்குகள் தொழிலில் தொடங்குவர்.

தீபாவளியை முதலில் கொண்டாடிவது நரகாசுரனின் மகன் பகதத்தன் ஆவார்.

பாதாளலோகம் சென்ற மாவலி ஆண்டுக்கு ஒருமுறை தான் பூலோக வரும்போது தன்னை பூளோக வாசிகள் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து வரவேற்கவேண்டுமெனக் கோரிய நாள் இதுவாகும். 

யமனின் தங்கை யமுனை. அதனால் அன்று அவர் தங்கைக்கு பரிசுகள் வழங்குவாராம்.அன்றைய தினம் அண்ணன் தங்கை சேர்ந்து உணவருந்த வேண்டுமெனவும் கூறப்படுகிறது.