தீபாவளி: அமாவாசை தினத்தில் எண்ணெய் தேய்த்து குளிப்பது சரியா...?

Last Modified புதன், 11 நவம்பர் 2020 (11:36 IST)
கிருஷ்ண பகவான் நரகாசுரனுக்கு கொடுத்த வரம் காரணமாக தீபாவளி தினத்தில் மட்டும் இதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கங்கா ஸ்நானம்; தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு எந்த தோஷமும் கிடையாது. 

  
தீபாவளிக்கு முன் தினம் சதுர்த்தி தினத்தில் தீபாவளி கொண்டாடுவார்கள், சூரிய உதயத்திற்கு முன்பாக அதிகாலையில் 4 மணியில் இருந்து 6 மணிக்குள், நல்ல  எண்ணெயை தலையிலும் உடலிலும் தேய்த்து, குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்கு பின்பு, சீயக்காய் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.
 
நல்ல எண்ணெயில் லட்சுமியும், குளிப்பதற்கு பயன்படுத்தும் வெந்நீரில் கங்கா தேவியும், உடலில் தேய்க்கப்படும் எண்ணெய்யைப் போக்குவதற்காக பயன்படுத்தும் சீயக்காய்த் தூளில் சரஸ்வதியும், வாயு பகவானும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
 
6 மணிக்கு முன்பு குளிக்க குளிர்ந்த நீரை பயன்படுத்தக்கூடாது. 6 மணிக்கு  பிறகு   குளிப்பதாக   இருந்தால்   வெந்நீர்  பயன்படுத்தக்கூடாது;  வெந்நீருக்கு  பதில் குளிர்ந்த நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
 
அமாவாசை தினத்தில் தீபாவளி கொண்டாடுவார்கள், சூரிய உதயத்திற்கு முன்பாக அதிகாலையில் 4 மணியில் இருந்து 6 மணிக்குள் நல்ல எண்ணெயை தலையிலும்   உடலிலும்   தேய்த்து   குறைந்தபட்சம் 15  நிமிடங்களுக்கு பின்பு சீயக்காய் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும்.
 
சூரிய உதயத்திற்கு பின்னர் அமாவாசையின் சக்தி அதிகரிக்கும். அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளித்தால், பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாவோம். நண்லெண்ணெய் தேய்த்து குளிக்க தோஷங்கள் விலகும். சனிஸ்வர பகவானின் பிடியில் இருந்தும் தப்பிப்போம். தரித்திரமும் நீங்கும். துஷ்ட சக்தியை விரட்டும்.
 
தீபாவளி திருநாள் அன்று காலையிலும், மாலையிலும் இல்லத்தில் விளக்கு ஏற்றவேண்டும். மிகச் சிறிய அளவில் மஞ்சள் வைத்த புது உடை, பட்டாசு, இனிப்பு  நைவேத்தியங்கள் படைத்து வணங்கி, பின்பு அந்த புத்தாடையை உடுத்தி, பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவது நல்லது.


இதில் மேலும் படிக்கவும் :