மலிவு விலையில் வீடுகள்… உலக வங்கியுடன் தமிழக அரசு ஒப்பந்தம்!
வீடு என்பது இன்றைக்கு அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. இந்நிலையில், குறைந்த வருவாய் பிரிவினர் மலிவான விலையில் வீடு பெற வேண்டி உலக வங்கியுடன் தமிழ்க அரசு ஒப்பந்த செய்துள்ளது.
இதுகுறித்த ஒப்பந்தங்களிலும் தமிழக அரசு மற்றும் உலக வங்கி சட்டப்பூர்வமாக கையெழுத்திட்டுள்ளன.
இதில், முதலாதாக சுமார் 200 மில்லியன் டாலர்கள் மதிப்பில் தமிழ்நாடு வீட்டு வசதியை வலுப்படுத்தும் வகையிலும் மற்றும் 50 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் வாழ்விட மேம்பாட்டு திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களுக்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தங்கள் தமிழக அரசும், உகல சுகாதார நிறுவனமும் கைழுதிட்டுள்ளனர்.
உலக வங்கியிடம் பெற்றுள்ள இந்தக் கடன்கள் மூன்றரை ஆண்டுகாலம் நீட்டிப்பு காலத்துடன் மொத்தம் 20 ஆண்டுக் காலங்களில் நிறைவடைபவை ஆகும்.