புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (10:57 IST)

வார்னருக்கு எப்படி தொடர் நாயகன் விருது தரலாம்? – அக்தர் வேதனை!

நேற்றைய உலகக்கோப்பை டி20 இறுதிப் போட்டியில் டேவிட் வார்னருக்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டதற்கு சோயிப் அக்தர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை டி20 போட்டிகள் விமரிசையாக நடந்து வந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் நியூஸிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொண்டன. இதில் ஆஸ்திரேலியா 18.5 ஓவர்கள் முடிவில் இரண்டே விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்து நியூஸிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது.

இந்த உலகக்கோப்பை தொடரில் நேற்றைக்கு ஆட்ட நாயகன் விருது மிட்செல் மார்ஷுக்கும், உலக கோப்பை டி20யின் தொடர் நாயகன் விருது டேவிட் வார்னருக்கும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இதற்கு வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் ”வார்னருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது நியாயமற்றது. பாப்ர் ஆசம் தொடரின் நாயகனாக வருவதை காண ஆவலுடன் இருந்தேன்” என பதிவிட்டுள்ளார்.