1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 8 மே 2017 (15:46 IST)

மினி உலக கோப்பை: அணியில் மீண்டும் இடம்பிடித்த யுவராஜ்

மினி உலக கோப்பைக்கான இந்திய வீரர்கள் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் யுவராஜ் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
 

 


சாம்பியன்ஸ் டிராபி கோப்பை போட்டியில் 8 நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றனர். இந்த போட்டி ஜூன் 1ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. 
 
இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. விராட் கோலி(கேப்டன்), தவான், ரோகித் சர்மா, யுவராஜ் சிங், மனிஷ் பாண்டே, உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ரவீந்திர ஜடேஜா, முகம்மது சமி, ஹெதார், ரஹானே, புவெனேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நீண்ட இடைவெளிக்கு பின் யுவராஜ் சிங் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். தற்போது நடைப்பெற்று வரும் ஐபிஎல் 10வது சீசனில் நல்ல பார்மில் விளையாடி வருகிறார். காயம் காரணமாக விளையாடமல் இருந்த ரோஹித் சர்மா தற்போது இந்திய அணியில் விளையாட உள்ளார்.
 
சிறந்த தொடக்காரரான ரோகித் சர்மா இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக விளையாட கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.