ஆர்சிபி ரெக்கார்டை இன்றைக்கும் உடைக்குமா கொல்கத்தா? – இன்று KKR vs RCB மோதல்!
இன்று பிற்பகல் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதிக் கொள்கின்றன.
இந்த சீசன் தொடங்கி 6 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 4 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. இதில் டெல்லிக்கு எதிரான போட்டியில் 272 ரன்களை அடித்து குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வரிசையில் 3வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் அணி 1 போட்டியில் மட்டுமே வென்று புள்ளி வரிசையில் கடைசியாக உள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் ஆர்சிபி அணியின் பேட்டிங், பவுலிங் இரண்டுமே பலவீனமாக இருந்து வந்துள்ளது. முன்னதாக ஏற்கனவே இந்த இரு அணிகளும் மோதிய நிலையில் கொல்கத்தா அணி வெற்றியை கைப்பற்றியிருந்தது.
இந்நிலையில் இன்று பிற்பகலில் நடைபெறும் போட்டியில் கொல்கத்தா அணி ஆர்சிபியின் 263 ரெக்கார்டை மீண்டும் ஒருமுறை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. முன்னதாக சன்ரைசர்ஸ் – ஆர்சிபி அணிகள் மோதியபோது 287 ரன்களை அடித்து சன்ரைசர்ஸ் அதிகபட்ச ஸ்கோர் சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K