Daily Horoscope

இந்தியாவோடு அரையிறுதியில் விளையாடப் போகும் அணி எது?

Written By vinoth
Updated: ஞாயிறு, 2 மார்ச் 2025 (13:25 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி இன்று நடக்கிறது. இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டதால் இந்த போட்டியின் முடிவு சாம்பியன்ஸ் கோப்பைக்கான அரையிறுதி தேர்வில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால் இந்த போட்டிக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை.

ஆனால் இந்த போட்டியின் வெற்றி தோல்வி முடிவுதான் அரையிறுதியில் எந்தந்த அணிகள் எந்த அணிகளை எதிர்த்து விளையாடப் போகின்றன என்பதை முடிவு செய்யும். இன்றைய போட்டியில் இந்திய அணி வென்றால் அது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும்.

அதே போல தோற்றால் அது தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடும். இந்தியாவின் போட்டிகள் துபாயில் மட்டுமே நடக்கிறது என்பதால் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளும் துபாய்க்கு சென்றுள்ளன. இன்றைய போட்டியின் முடிவை பொறுத்து ஒரு அணி மீண்டும் பாகிஸ்தான் திரும்பும்.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments