வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 1 மே 2017 (17:25 IST)

சன்னி லியோனுடன் ஜோடி போடும் கிரிக்கெட் வீரர் சேவாக்!

சன்னி லியோனுடன் ஜோடி போடும் கிரிக்கெட் வீரர் சேவாக்!

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுடன் சேர்ந்து கிரிக்கெட் கமெண்ட்ரி செய்ய தான் தயாராக இருப்பதாக இந்திய அணியின் பிரபல முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


 
 
பத்தாவது ஐபிஎல் சீசனில் நடைபெறும் பஞ்சாப், டெல்லி இடையேயான லீக் போட்டியை யூசி நியூஸ் சார்பாக கமெண்ட்ரி செய்ய சன்னி லியோன் நியமிக்கப்பட்டார். இதற்காக தனக்கு ஒரு பிரபல கிரிக்கெட் வீரரின் துணை தேவைப்படுகிறது என சன்னி லியோன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

 


இதனை பார்த்த இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தானாக முன் வந்து சன்னி லியோனுடன் சேர்ந்து கமெண்ட்ரி செய்ய நான் தயாராக உள்ளேன் என பதில் அளித்திருந்தார்.