செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2023 (07:31 IST)

டி 20 கிரிக்கெட்டில் இனி ரோஹித், கோலிக்கு இடமில்லையா? அதிர்ச்சி தரும் தகவல்

கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்து வந்த உலகக் கோப்பை தொடர் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணி ஆறாவது முறையாகக் கோப்பையை வென்றது.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி இந்தியாவோடு5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கோலி, மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு இடமளிக்கப்படவில்லை.

கடந்த ஒரு ஆண்டாகவே அவர்கள் இருவருக்கும் டி 20 அணியில் இடமில்லை. இப்போது ஆஸி தொடருக்கும் அறிவிக்கப்படாததால் இனிமேல் அவர்களை டி 20 போட்டிக்கு இந்திய அணி கருதாது என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் டி 20 உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.