செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 28 ஜனவரி 2021 (13:05 IST)

வைஷாலியை கரம் பிடித்த ஆல் ரவுண்டர் விஜய் ஷங்கர் !!

விஜய் ஷங்கர் -  வைஷாலி திருமணம் கோலகலமாக நடந்து முடிந்துள்ளது. 

 
தமிழகத்தைச் சேர்ந்த விஜய் ஷங்கர் இந்திய அணிக்காக சில போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆல்ரவுண்டராக திகழும் விஜய் ஷங்கர் இந்திய அணியில் இடம்பிடித்து உலகக்கோப்பை தொடரிலும் இடம்பிடித்தார். ஆனால் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அணியில் இடம்பெற முடியவில்லை. 
 
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு வைஷாலி என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனிடையே தற்போது இவர்களது திருமணம் கோலகலமாக நடந்து முடிந்துள்ளது. இதற்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் வாழ்த்து தெரிவித்துள்ளது.