விஜய் படத்தைப் புகழ்ந்த பிரபல கிரிக்கெட் வீரர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் நடித்த மாஸ்டர் படத்தைப் பார்த்த பிரபல கிரிக்கெட் வீரர் இப்படத்தையும் நடிகர் விஜய்யையும் புகழ்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியானபடம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்சேதிபதி, மகேந்திரன்,மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்படம் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு பான் இந்திய படமாக வெளியானது.
இந்நிலையில், தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வருவதால் TNPL கமெண்டரில் பங்கேற்ற சென்னை அணியின் பிரபல வீரர் ரெய்னா, விஜய்யின் மாஸ்டர் படத்தைப் பாராட்டியுள்ளார்.
மேலும், மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக்கை தன் மகனுடன் கண்டு ரசித்ததாகவும், விஜய் மாஸ்டர் படத்தில் நன்றாக நடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், கேரளத்தில் மலையாள சினிமா வில் அதிக வசூல் குவித்த படங்களில் சூப்பர் ஸ்டார் மோகன் லாலுக்குப் போட்டியாக விஜய் உள்ளார் என்பது அவரது 2 படங்கள் அதிக வசூல் சாதனை படைத்திருக்கிறது என்பது சாதனையாகப் பார்க்கப்படுகிறது.