சார்பட்டா பரம்பரையை கைப்பற்றிய ஸ்டார் விஜய்!

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 20 ஜூலை 2021 (11:40 IST)
சார்பட்டா பரம்பரையின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கடும் போட்டிக்கிடையில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.

 
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா. இந்த படத்தில் ஆர்யாவோடு துஷாரா, கலையரசன், பசுபதி மற்றும் சந்தோஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் 1980களில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்ட இந்த படம் குத்துச்சண்டையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் பல முக்கிய படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன, அந்த வகையில் சார்பட்டா பரம்பரையும் அமேசான் ப்ரைம் ஓடிடியில் ஜூலை 22 அன்று வெளியாக உள்ளது. 
 
சார்பட்டா பரம்பரையின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கடும் போட்டிக்கிடையில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. படம் ஓடிடியில் வெளியான சில வாரங்களில் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படும் என தெரிகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :