வெல்ல வேண்டிய கட்டாயத்தில் டெல்லி; விட்டுக்கொடுக்குமா மும்பை?

சனி, 31 அக்டோபர் 2020 (11:48 IST)
ஐபிஎல் போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்று முதலாவது ஆட்டத்தில் மோத உள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் போட்டி மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயை நெருங்கியுள்ளன. இந்நிலையில் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், மூன்றாம் இடத்தில் உள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் இன்று போட்டி நடைபெற உள்ளது.

தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள டிசி தொடர்ந்து இரண்டு ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே தரவரிசையின் நான்கு இடங்களுக்குள் நீடிக்க முடியும். இதனால் இன்றைய ஆட்டம் டிசிக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 8ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்துள்ளது. முதல் இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளும். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சு, பேட்டிங் என நல்ல ஃபார்மில் உள்ளதால் டிசிக்கு இந்த ஆட்டம் கடினமான ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

ஸ்பெயின் வீரர் போட்ட ஒரே ஒரு கோல்.. ஆபாச நடிகை மியா கலீஃபாவுக்கு ரூ. 6.27 கோடி லாபம்..

வலி அதிகமா இருக்கு!.. காயம் ஆறுவது கடினம்!.. மெஸ்ஸி உருக்கம்....

கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு இத்தனை கோடியா? குவியும் பரிசுமழை...

FIFA உலக கால்பந்து போட்டி!.. அர்ஜென்டினா கோட்டை விட்டது எங்கே?...

டி20 தொடரை அடுத்து ஒருநாள் தொடரையும் இழந்த இந்தியா.. ரசிகர்கள் அதிருப்தி..

அடுத்த கட்டுரையில்
Show comments