இன்னைக்கு ஜெயிச்சிட்டா ப்ளே ஆஃப்தான்! – மதில் மேல் பூனையாக ஹைதராபாத்!
அரபு அமிரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இன்றைய கடைசி போட்டியில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோத உள்ளன.
நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டு சுற்று ஆட்டங்களும் ஏறத்தாழ முடிந்துவிட்ட நிலையில் ப்ளே ஆஃப் செல்வதற்கான நான்கு அணிகளில் மூன்று அணிகள் தேர்வு செய்யப்பட்டு விட்டன. இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது சுற்றின் இறுதி ஆட்டத்தில் சன் ரைஸர்ஸ் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்புள்ளது. இல்லையென்றால் ஏற்கனவே நான்காவது இடத்தில் உள்ள நைட் ரைடர்ஸ் ப்ளே ஆஃப்க்கு முன்னேறும்.
நைட் ரைடர்ஸை விட சன் ரைஸர்ஸ் அணியின் என்.ஆர்.ஆர் அதிகமாக உள்ளதால் ப்ளே ஆஃப் செல்ல வேண்டுமென்றால் இன்றைக்கு கட்டாயம் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் சன் ரைஸர் அணி டெல்லியை எதிர்கொள்ள உள்ளது.
வார்னர், பேர்ஸ்டோ, ஹோல்டர் போன்றவர்கள் பேட்டிங்கில் நல்ல பார்மில் இருந்தாலும் சில சமயம் சொதப்பல்களும் ஏற்படுகிறது. பௌலிங்கில் தமிழக வீரர் தங்கமுத்து நடராஜன், சந்தீப் சர்மா, ப்ரித்வி ராஜ் ஆகியோர் மீது நம்பிக்கை உள்ளது. இன்றைய போட்டி சன் ரைஸர்ஸ்கு வாழ்வா சாவா போட்டி என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.