Daily Horoscope

இன்றாவது முதல் வெற்றியை பெறுமா சிஎஸ்கே? – பஞ்சாப் அணியோடு போட்டி!

Written By Prasanth Karthick
Updated: ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (10:15 IST)
இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை – பஞ்சாப் அணிகள் மோதும் நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் சிஎஸ்கே வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் தொடங்கி விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் கடந்த இரண்டு ஆட்டங்களிலும் சிஎஸ்கே தோல்வி அடைந்து அதிர்ச்சியை அளித்துள்ளது.

அதிலும் லக்னோ அணியுடனான கடந்த ஆட்டத்தில் வெற்றி பெற வாய்ப்பிருந்தும் கடைசி இரண்டு ஓவர்களில் அதிகமான ரன்களை விட்டதும், எக்ஸ்ட்ரா பந்துகளை வீசியதும் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் இன்று பஞ்சாப் அணியுடன் நடக்கும் போட்டியிலாது சிஎஸ்கே தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரண்டு போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி பெற்றுள்ள பஞ்சாப் அணி 7வது இடத்தில் சிஎஸ்கே 8வது இடத்திலும் உள்ளது. இன்றைய போட்டி மாலை 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments