வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (13:23 IST)

இந்திய அணி உலகக் கோப்பை தொடர்களில் சொதப்புவது இதனால்தான்… இயான் பிஷப்பின் கருத்து!

இந்திய கிரிக்கெட் உலக கிரிக்கெட் அணிகளில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அணியாக இருந்து வருகிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக இருந்து ஐசிசியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஆனாலும் இந்திய அணி தொடர்ந்து ஐசிசி கோப்பைகளில் சொதப்பி வருகிறது. சிறப்பாக விளையாடி நாக் அவுட் போட்டிகள் வரை சென்று அதன் பின்னர் சொதப்பி வெளியேறுகிறது. இந்த சோகம் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்திய ஐசிசி கோப்பை தொடர்களில் தொடர்ந்து சொதப்புவது குறித்து வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் இயான் பிஷப் கருத்து தெரிவித்துள்ளார். அதில் “இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகப்பெரிய பலவீனமாக உள்ளார்கள். ஐசிசி தொடர்களில் ஒரு அணி வெற்றி பெற வேண்டும் என்றால் உங்களிடம் மிகவும் திறமையான மற்றும் சிறப்பாக செயல்படக்கூடிய வேகப் பந்துவீச்சாளர்கள் தேவை.” எனக் கூறியுள்ளார்.