திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 2 டிசம்பர் 2022 (17:08 IST)

முதல் டெஸ்ட் போட்டியில் முத்திரை பதித்த சந்தர்பாலின் மகன்!

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரரான ஷிவ்நாராயன் சந்தர்பாலின் மகன் டாஜ்நரைன் சந்தர்பால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகள் விளையாடிய வீரர் என்ற சாதனைக்கு உரியவர் ஷிவ்நாராயன் சந்தர்பால். சந்தர்பால் 1994ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி [30 சதங்கள், 66 அரைச்சதங்கள்] 11, 867 ரன்கள் குவித்துள்ளார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், இப்போது அவரின் மகன் டாஜ்நரேன் சந்தர்பால் இப்போது நடக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆகியுள்ளார்.

இந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர் அரைசதம் அடித்து தனது வருகையை சிறப்பான ஒரு இன்னிங்ஸ் மூலம் சிறப்பித்துள்ளார்.