Daily Horoscope
✕

ஹர்திக் பாண்ட்யா இருந்தாலும் ஷிவம் துபேவை தவிர்க்க முடியாது… சுனில் கவாஸ்கர் கருத்து!

Written By vinoth
Updated: செவ்வாய், 16 ஜனவரி 2024 (17:37 IST)
இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையேயான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வரும் நிலையில் முதல் இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. மூன்றாவது போட்டி நாளை பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்து ஷிவம் துபே கலக்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர் சிறப்பாக பந்துவீசியும் வருகிறார்.

இதனால் அவர் டி 20 உலகக் கோப்பை தொடரில் தவிர்க்க முடியாத வீரராக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் “துபே இதே போன்ற ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினால் அவரை கைவிட முடியாது. அதனால் அவர் தேர்வுக் குழுவினருக்கு தலைவலியாக இருப்பார்.

ஹர்திக் பாண்ட்யாவும், துபேவும் ஆல்ரவுண்டர்கள் என்ற வகையில் இருவருக்கும் இடையே டி 20 உலகக் கோப்பையில் இடம்பிடிப்பதில் கடும் போட்டி நிலவும். இருவரும் ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களின் இடம் உறுதியாகும்” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

33 பந்துகளைச் சந்தித்து டக் அவுட்.. 10 வருடத்திற்கு பின் திரும்பிய வீரர் பரிதாப அவுட்..

பிரேமானந்த் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடியா? விராட் கோலி தரப்பு மறுப்பு!

ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் குதித்த கங்குலி.. இனி நான் பார்வையாளன் இல்லை என பதிவு...

வாஷிங்டன் சுந்தருக்கு தமிழக அரசு ரூ.75 லட்சம் பரிசுத்தொகை.. முதல்வர் விஜய் அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments