Daily Horoscope
✕

கோலி கண்டிப்பாக 100 சதங்கள் அடிப்பார்… சுனில் கவாஸ்கர் சொல்லும் கணக்கு!

Written By vinoth
Updated: புதன், 18 ஜனவரி 2023 (15:30 IST)
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகளையும் வென்ற இந்திய அணி இலங்கை அணியை வொயிட்வாஷ் செய்தது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 390 ரன்கள் குவித்தது. விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் சகமடித்தனர். விராட் கோலி 110 பந்துகளில் 166 ரன்கள் சேர்த்தார்.

இந்த சதத்தின் மூலம் கோலி ஒரு நாள் போட்டிகளில் 46 சதங்களை அடித்துள்ளார். சச்சினின் சாதனையான 49 சதங்களை அடிக்க அவருக்கு இன்னும் 3 சதங்கள் தேவை.

இதுபற்றி பேசியுள்ள சுனில் கவாஸ்கர் “ கோலி இன்னும் 5 முதல் 6 ஆண்டுகள் வரை விளையாடுவார் என நினைக்கிறேன். சச்சின் 40 வயது வரை விளையாடினார். கோலியும் அப்படி விளையாடுவார் என நினைக்கிறேன். ஏனென்றால் கோலி பிட்னெஸ் விஷயத்தில் அக்கறை காட்டுகிறார். அதனால் அவர் சர்வதேச போட்டிகளில் இன்னும் 26 சதங்கள் அடித்து 100 சதங்கள் என்ற மைல்கல்லை எட்டுவார் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் குதித்த கங்குலி.. இனி நான் பார்வையாளன் இல்லை என பதிவு...

வாஷிங்டன் சுந்தருக்கு தமிழக அரசு ரூ.75 லட்சம் பரிசுத்தொகை.. முதல்வர் விஜய் அறிவிப்பு..

352 ரன்கள் என்ற இலக்கை எட்டி சாதனை செய்த மே.இ.தீவுகள்.. தொடரை வென்றது இந்தியா...

மே.இ.தீவுகளுக்கு எதிரான 3வது போட்டி.. பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர் விலகல்.. மாற்று வீரர்கள் யார் யார்?

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அட்டவணை.. இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டியின் நாள்..

அடுத்த கட்டுரையில்
Show comments