ஹென்ரிச் கிளாசனுக்கு இத்தனைக் கோடியா?... சன் ரைசர்ஸ் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியல்!

vinoth
வியாழன், 17 அக்டோபர் 2024 (07:33 IST)
ஐபிஎல் அடுத்த சீசனுக்கு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களைத் தக்கவைக்கலாம் என்ற புதிய விதிகளை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ளலாம். அதில் அதிகபட்சமாக 5 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களாக இருக்கலாம். அதே போல அன்கேப்ட் வீரர்களாக அதிகபட்சம் 2 பேர் இருக்கலாம்.

வீரர்களை ரிடென்ஷன் மற்றும் RTM ஆகிய முறைகளில் அணிகள் தக்கவைக்கலாம். ஒரு அணி ஒரே ஒரு வீரரை மட்டுமே ரிடென்ஷன் முறையில் தக்கவைக்கிறது என்றால் ஏலத்தில் 5 வீரர்களை RTM முறையில் தக்கவைக்கலாம்.

இந்நிலையில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி தங்கள் அணியில் தக்க வைக்கப் போகும் மூன்று வீரர்களுக்கான உத்தேச பட்டியலை முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ஹென்ரிச் கிளாசனை 23 கோடி ரூபாய்க்கும், பேட் கம்மின்ஸை 18 கோடி ரூபாய்க்கும், அபிஷேக் சர்மாவை 14 கோடி ரூபாய்க்கும் தக்கவைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  மேலும் டிராவிஸ் ஹெட் மற்றும் நிதிஷ்குமார் ஆகியோரையும் தக்க வைக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

எல்லாம் காட்டு

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி.. பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறும் காரணம் என்ன தெரியுமா?

கேப்டன் ஆனார் திலக் வர்மா.. முத்தரப்பு தொடருக்கு இந்திய அணி அறிவிப்பு..

113 கோடி கொடுத்து பேட் கம்மின்ஸ் தக்கவைப்பு.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி..!

10 லட்ச ரூபாய்க்கு ஏலம் போன அர்ஜூன் டெண்டுல்கர்.. ஏலம் எடுத்த அணி எது?

நடுவரின் அவுட் தீர்ப்பு குறித்த சர்ச்சை.. விராத் கோலியின் ஆவேசத்தால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments