கோலி பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்கள் – ஸ்டீவ் ஸ்மித்தைக் கேட்ட ரசிகர்!

செவ்வாய், 16 ஜூன் 2020 (08:02 IST)
இந்திய அணியின் கேப்டன் கோலி பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் என்ன சொல்வீர்கள் என ரசிகரின் கேள்விக்கு ஸ்டீவ் ஸ்மித் பதிலளித்துள்ளார்.

தற்போதைய கிரிக்கெட் உலகில் மூடி சூடா மன்னர்களாக விளங்கும் இரு பேட்ஸ்மேன்களாக விராட் கோலியும், ஸ்டீவ் ஸ்மித்தும் இருக்கின்றனர். இவர்கள் இருவரில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற விவாதம் ரசிகர்கள் முதல் முன்னாள் வீரர்கள் வரை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. கோலி லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டுகளில் சிறப்பாக விளையாடுவதாகவும், ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதாகவும் விமர்சகர்களால் சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஸ்டீவ் ஸ்மித் கலந்துகொண்ட இன்ஸ்டாகிராம் உரையாடலில் அவரிடம் ஒரு ரசிகர் ‘கோலியைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வது என்றால் என்ன சொல்வீர்கள்?’ எனக் கேட்டார். அதற்கு ஸ்டீவ் ஸ்மித்’குறும்பு(freak)’ எனக் கூறியுள்ளார். அதே போல தோனியைப் பற்றி கேட்ட போது ‘லெஜெண்ட் மிஸ்டர் கூல்’ என பதிலளித்துள்ளார்.

எல்லாம் காட்டு

அயர்லாந்திடம் தோல்வி அடைந்தது இந்திய அணி.. தொடரையும் அயர்லாந்திடம் இழந்த சோகம்..

29 பந்துகளில் 94 ரன்கள்.. 10 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்.. ருத்ரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி...

சுப்மன் கில், இஷான் கிஷான்.. ரெண்டு பேருமே சதம்.. ஆப்கன் அணிக்கு எதிராக அதிரடி காட்டிய இந்தியா...

இந்திய வீராங்கனையை அடித்தாரா பாகிஸ்தான் பந்துவீச்சாளர்.. இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ

உலக கோப்பையில் விளையாட விடாமல் சதி செய்தது எங்கள் நாட்டு கிரிக்கெட் போர்டு.. வங்கதேச கேப்டன் பகீர் புகார்..

அடுத்த கட்டுரையில்
Show comments