விராட் கோலி தான் எப்போதும் சூப்பர் வீரர் – வெங்சர்கார்

sinoj| Last Updated: வியாழன், 11 ஜூன் 2020 (23:22 IST)

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் திறமையை அனைவரும் அறிந்ததுதான். ஆனால் அவரை இந்திய அணிக்குக் கொண்டு வந்தது பற்றிவெங்சர்கார் கூறியுள்ளதாவது :

நான் இந்திய அணியின் தேர்வுக்குழுவின் தலைவராக இருந்தபோது, நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் வீரர் தொடக்க வீரராக களமிறங்கி 123 ரன்கள் எடுத்து இறுதிவரை கிரீசிலேயே ஆட்டமிழக்காமல் இருந்தார். அப்போது இந்திய அணி 240 ரன்கள் எடுத்தனர். கோலியின் ஆட்டம் அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தது. அப்போதே கோலி முதிர்ச்சி பெற்ற வீரராக இருந்தார் என்று கூறினார்.

மேலும், இந்திய அணியில் 2008 ஆம் ஆண்டு கோலி சேர்க்கப்பட்ட போது வெங்சர்கார் அவரை எமர்ஜிங் அணியில் இருந்து தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :