Daily Horoscope
✕

ஆஸி அணியில் ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டிங் வரிசை என்ன?... பயிற்சியாளர் அளித்த பதில்!

Written By vinoth
Updated: புதன், 11 செப்டம்பர் 2024 (07:17 IST)
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியைச் சேர்ந்த  டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் அந்த அணி சரியான தொடக்க ஆட்டக்காரருக்கான தேடலில் உள்ளது. இதனால் தற்காலிகமாக அந்த இடத்தை நிரப்பி வந்தார் ஸ்டீவ் ஸ்மித்.

ஆனால் வழக்கமாக அவர் ஆடும் நான்காம் இடத்தை விட்டு தொடக்க ஆட்டக்காரராக அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை. சில போட்டிகளில் அவர் சொதப்பினார். இதனால் அவரை மீண்டும் நான்காம் இடத்துக்கே அனுப்ப அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுபற்றி பேசியுள்ள ஆஸி அணி பயிற்சியாளர் மெக்டொனால்ட் “கண்டிப்பாக தொடக்க ஆட்டக்காரராக யாரைக் களமிறக்குவது என்பது பற்றி நாங்கள் விவாதித்து வருகிறோம்” எனக் கூறியுள்ளார். டிராவிஸ் ஹெட்டை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவுக்கு எதிரான தொடரில் இந்த முடிவு கைமேல் பலன் கொடுக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

எல்லாம் காட்டு

மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் குதித்த கங்குலி.. இனி நான் பார்வையாளன் இல்லை என பதிவு...

வாஷிங்டன் சுந்தருக்கு தமிழக அரசு ரூ.75 லட்சம் பரிசுத்தொகை.. முதல்வர் விஜய் அறிவிப்பு..

352 ரன்கள் என்ற இலக்கை எட்டி சாதனை செய்த மே.இ.தீவுகள்.. தொடரை வென்றது இந்தியா...

மே.இ.தீவுகளுக்கு எதிரான 3வது போட்டி.. பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர் விலகல்.. மாற்று வீரர்கள் யார் யார்?

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அட்டவணை.. இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டியின் நாள்..

அடுத்த கட்டுரையில்
Show comments