1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (16:26 IST)

குப்பையில் கிடந்த தங்க சங்கலி - தூய்மை பணியாளர் செய்த தரமான சம்பவம்.! குவியும் பாராட்டு..!!

Gold Chain
சென்னையில் குப்பையில் தவறவிட்ட ரூ.1.65 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பாலுவுக்கு  பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  
 
சென்னை அடையார் பகுதியில் உள்ள பரமேஸ்வரி நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் காமாட்சி சந்தானம். இவர், தனக்கு சொந்தமான ரூ.1.65 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியைத் தெரியாமல் குப்பையோடு குப்பையாக போட்டுள்ளார். 

இந்த நிலையில் தூய்மை பணியாளர் பாலு, குப்பைகளைப் பிரிக்கும் போது இந்த தங்க நகையை கண்டுபிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, காமாட்சி சந்தானத்தின் தங்க நகை தொலைந்த தகவலை அறிந்த பாலு,  தங்க நகையை உரியவரிடம் நேரில் சந்தித்து ஒப்படைத்துள்ளார். 

 
காணாமல் போன தங்க நகை கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியடைந்த காமாட்சி- சந்தானம் தம்பதியினர் தூய்மை பணியாளர் பாலுவுக்கு நன்றி தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த தகவல் அறிந்த அதிகாரிகளும், சக ஊழியர்களும் பாலுவுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.