Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளையாட பிடிக்கலைனா போயிட்டே இருங்க! – ரெய்னா வெளியேற்றம் குறித்து சீனிவாசன்!

Written By Prasanth Karthick
Updated: திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (08:44 IST)
அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா வெளியேறி உள்ள நிலையில் பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் ரெய்னா குறித்து பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடத்த முடியாத சூழலில் அரபு அமீரகத்தில் போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டு ஐபிஎல் அணி வீரர்கள் அமீரகம் சென்றுள்ளனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரரான சுரேஷ் ரெய்னா திடீரென போட்டிகளில் இருந்து விலகி இந்தியா திரும்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது தனிப்பட்ட பிரச்சினைகளால் அவர் வெளியேறியிருக்கலாம் என கூறப்பட்டு வரும் நிலையில், தோனி, ரெய்னா இடையே மோதல் எழுந்ததாகவும் கிரிக்கெட் வட்டாரத்டில் பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில் பேசியுள்ள முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசன் “சிலருக்கு வெற்றி போதை தலைக்கேறி விட்டால் இப்படி நடக்கும். ஐபிஎல் இன்னும் தொடங்கவில்லை. விரைவில் 11 கோடி வருமானத்தை இழந்ததற்காக ரெய்னா வருந்துவார். விளையாடியே ஆக வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. விருப்பம் இல்லையென்றால் வெளியேறி போய் விடலாம். தோனி அவ்வபோது வீரர்களின் உடல்நிலை பற்றி கேட்டறிகிறார். எந்த சூழலையும் சமாளிக்க தயாராய் உள்ளார்” என கூறியுள்ளார்.

சீனிவாசனின் இந்த கருத்தால் சுரேஷ் ரெய்னாவுக்கு அணியின் நிர்வாக தலைமையுடன் மோதல் எழுந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

எல்லாம் காட்டு

டெஸ்ட் போட்டிக்கு தேற மாட்டாரா வைபவ் சூர்யன்வன்ஷி.. 6 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவுட்..

2027 உலக கோப்பை.. முன்னாள் வீரர் உத்தப்பாவின் கனவு அணியில் வைபவ் சூர்யவன்ஷி..

முதலாவது டெஸ்ட் போட்டி: இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!

2வது இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய அணி.. இலங்கைக்கு இலக்கு எவ்வளவு ரன்கள்?

கபில்தேவ் சாதனையை சமன் செய்தார் ஜடேஜா.. குவியும் வாழ்த்துக்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments